கத்தோலிக்க திருச்சபையானது 26 .07 .2012)புனித சுவக்கீன்
அன்னம்மாள் ஆகியோரின் பெயர் கொண்ட திருநாளை நினைவு
கூர்ந்து கொண்டாடுகின்றது
.மட் /வீச்சுக்கல்முனை தூய அன்னம்மாள்
.மட் /வீச்சுக்
ஆலயத்தில் காலை 06 .30 மணிக்கு மட்டு மறைமாவட்ட ஆயர்
அதி வந்தனைக்குரிய பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை
தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
விஷேட நிகழ்வாக உறுதிப்பூசுதல் ,மற்றும் திவ்விய நற்கருணை திரு
அருட்சாதனங்கள் ஆயரால் பிள்ளைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதிகளவிலான மக்கள் இச்சிறப்பு திருப்பலியில் இணைந்துகொண்டனர்.
கடந்த 20 .07 .2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலய
வருடாந்த திரு விழாவானது ஞாயிறு 29 .07 .2012 காலை
பெருவிழா திருப்பலியுடன் இனிதே நிறைவு பெற்றது.
மட்டக்களப்பு மறைக்கோட்டத்திலுள்ள அதிகளவிலான
தூய அன்னம்மாளின் பக்தர்கள் திருவிழா இரண்டு திருப்பலிகளிலும்
கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மறைமாவட்ட புதிய முதலாவது ஆயர் அதிவந்தனைக்குரிய
ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுக்கு பங்கு மக்களால்
மாபெரும் வரவேற்ப்பு வழங்கப்பட்டது.