Monday, October 29, 2012

மட்டு மறை மாவட்டத்தின் மாபெரும் நிகழ்வாக மறைக்கல்வி ஆண்டில் "விவிலிய கண்காட்சி"


[வ.சுரேஸ் கண்ணா] 
 [ V .ANTONY SURESH  KANNA
MEDIA -BT /STMARYS CATHEDRAL ]

மறைக்கல்வி ஆண்டை முன்னிட்டு எல்லாருக்கும் மறைக்கல்வி 
என்னும் சிந்தனை நோக்கில் இவ்வாண்டின் மாபெரும் நிகழ்வாக 
27 .10 .2012 அன்று சனிக்கிழமை மட்டு மறைக் கோட்டத்திற்கு 
உட்பட்ட பங்குகளுக்கு மட்/புனித மிக்கேல் கல்லூரியில் மட்டு 
மறைக்கல்வி நடு நிலையம் மாபெரும் விவிலிய கண்காட்சியினை 
ஒழுங்கு செய்து நடாத்தியிருந்தது.

காலை 09 .௦௦ மணிக்கு மட்டு காந்தி சதுக்கத்தில் மறைக்கல்வி மாணவர்கள் 
மறை ஆசிரியர்கள் ,பங்கு தந்தையர்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட் 
தந்தை கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்களுடன் 
ஒன்று கூடி அங்கிருந்து பவனியாக மட் புனித மிக்கேல் கல்லூரி 
கூடைப்பந்தாட்ட திடலை அடைந்து மறைமாவட்ட கொடியினை 
ஆயர் அவர்களும் ,மறைக்கல்வி கொடியினை அருட்தந்தை
T.A . ஜூலியன் அடிகளாரும் ஏற்றி வைக்க புளியந்தீவு தூய 
மரியாள் பேராலய மறை ஆசிரியர்களின் மறைக்கல்வி கீதம் 
,மறைக்க்லவி செபம் ஆகியவற்றை தொடர்ந்து நிகழ்வுகள் 
ஆரம்பமாகியது.

நிகழ்வுகளின் போது மறைமாவட்ட ஆயர் அவர்களும் முன்னாள்
மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர்களும் ,மறை
ஆசிரியர் ஒன்றிய தலைவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்.
மறை அறிவு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள்
வழங்கி வைக்கப்பட்டது.  

விவிலிய கண்காட்சியினைப் பார்வையிட ஏராளமான மாணவர்களும் 
பொதுமக்களும் வருகை தந்திருந்தார்கள்.கண்காட்சியில் முதலாம் 
இரண்டாம்,மூன்றாம் இடங்களை முறையே தாழங்குடா,சகாயபுரம்  
 கல்லடி- டச்பார்  பங்குகள் பெற்றுக்கொண்டன.

மட்டு மறை மாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் 
அருட்தந்தை T.A . ஜூலியன் அடிகளாரின் தலைமையில் 
நடைபெற்ற இந்நிகழ்வுகளை மறைக்கல்வி நடுநிலைய 
பணியாளர்கள் சிறந்த முறையில் ஒழுங்கு செய்து நெறிப்படுத்தி
இருந்தமை குறிப்பிடத்தக்கதும் பாராட்டுதலுக்குரியதுமாகும் .



















   . 

Wednesday, October 17, 2012

குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த பெருவிழாவும் புதிய ஆலய கட்டட மந்திரிப்பு நிகழ்வும்.


[ V .ANTONY SURESH  KANNA,MEDIA -BT /STMARYS CATHEDRAL ]
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதிக்குட்பட்ட 
குருக்கள் மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த பெருவிழா 
கொடியேற்றமும் புதிய ஆலய கட்டட மந்திரிப்பு நிகழ்வும்.
 மட்டு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி 
ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

பிரான்சிஸ் அசீசியார் ஆலய பங்குத்தந்தை சாந்தன் இம்மானுவேல் 
அடிகளாரின்  தலைமையில் பங்குமக்களுடன் ஆயர் பவனியாக 
அழைத்துவரப்பட்டு விஷேட ஜெப வழிபாடுகளைத் தொடர்ந்து 
புதிய ஆலய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்திருவிழா எதிர்வரும் 21  ஆம் திகதி பெருவிழா 
கூட்டுத்திருப்பலியுடன் நிறைவடைய இருப்பது 
குறிப்பிடத்தக்கதாகும்.