Thursday, September 27, 2012

தூய வின்சன்ட் டி போல் சபை,மட்டக்களப்பு நூற்றாண்டு விழா !1912 -2012


[ இறை ஓவியன் ]
நிகழ்வுகள்:
29 .09 .2012 சனிக்கிழமை மாலை 4 மணி :விழிப்புணர்வு நடை பவனி .
தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் இருந்து 
ஆரம்பமாகும்.

மாலை 6 மணி ;ஆரம்ப நிகழ்வு 
இடம் :தூய சிசிலியா மகளிர் கல்லூரி.

30 .09 .2012  ஞாயிற்றுக்கிழமை 
காலை 07 .30 மணிக்கு திருமலை மறைமாவட்ட ஆயர்
பேரருட் தந்தை  ஜோசெப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை 
தலைமையில் தூய மரியாள் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி 
ஒப்புக்கொடுக்கப்படும்.நிறைவில் பேராலய வளாகத்தில் 
நிர்மாணிக்கப்படும் நூற்றாண்டு விழா நினைவுச் சின்னத்தை 
ஆயர் அவர்கள் திறந்து வைப்பார்.

காலை 09 .௦௦ மணி :மாநாடும் பொதுக்கூட்டமும் 
இடம் :தூய சிசிலியா மகளிர் கல்லூரி.
தமது பெருமைக்குரிய நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகளில் 
சமூகம் தந்து தங்களை மகிழ்விக்க தூய வின்சன்ட் டி போல் சபை,மட்டக்களப்பு
ஞான ஆலோசகர்,தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பணிவாக 
வேண்டி நிற்கின்றனர்.
 

புதிய மட்டு ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா பங்குபற்றிய முதல் மறைக்கல்வி நிகழ்வு!.



[வ.சுரேஸ் கண்ணா ]
புதிய மட்டக்களப்பு மறை மாவட்ட முதல் ஆயராக 23 .09 .2012  
அன்று பணிகளை பொறுப்பேற்ற ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை(23.09.2012 )மாலை 6 மணிக்கு தூய மரியாள் பேராலய முன்றலில்  நடைபெற்ற 
மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வுகளில் பிரதம 
அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அங்கு உரையாற்றிய ஆயர் தான் ஆயராக பொறுப்பேற்று 
மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வில் முதலாவதாக கலந்து கொள்வதையிட்டு தான் பெரு மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

கிழக்குப்பல்கலைக்கழக நடன விரிவுரையாளர் திருமதி சர்மிளா ரஞ்சித்குமார் அவர்கள்  ஆயரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளை நினைவு கூருமுகமாக 
புளியந்தீவு தூய மரியாள் பேராலய மறை ஆசிரியர்கள் 
மறைக்கல்வி மாணவர்களின் இக்கலை நிகழ்வுகளை 
ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பங்கு தந்தையர்களுடன் அதிகளவிலான பங்கு மக்கள் 
கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.










Sunday, September 2, 2012

ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த பாத யாத்திரையும்,பெருவிழாவும் இனிதே நிறைவு!



[வ.சுரேஸ் கண்ணா ]
கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரை ஸ்தலமான 
ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய வருடாந்த பாத
 யாத்திரையும்,பெருவிழாவும் இனிதே நிறைவடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை  24 .08 .2012 அன்று கொடியேற்றத்துடன் 
ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று காலை 02 .09 .2012  
வணக்கத்துக்குரிய ஆயர் பேரருட் தந்தை கிங்சிலி சுவாம்பிள்ளை
ஆண்டகை  தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியை
தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப ஆசீரைத் தொடந்து கொடி
 இறக்கத்துடன் பெருவிழா நிறைவடைந்தது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் சிங்கள கத்தோலிக்க யாத்திரிகரும் ,
வெவ்வேறு பங்குகளை சார்ந்த இறைமக்களும் பெருவிழா 
வழிபாடுகளில் கலந்துகொண்டார்கள்.

வணக்கத்துக்குரிய ஆயர் பேரருட் தந்தை கிங்சிலி சுவாம்பிள்ளை
அவர்களுக்கு வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
திருத்தல இணையத்தளமும் இன்று முதல் வலைத்தளங்களில் 
பார்வையிட முடியும் என பங்குதந்தை அருட்பணி டக்ளஸ் ஜேம்ஸ் 
அவர்கள் குறிப்பிட்டார்[.www .motherhelp .org ]

சனிக்கிழமை காலை புளியந்தீவு தூய மரியாள் பேராலயத்தில் இருந்து 
ஆரம்பமான பாதயாத்திரையில் சுமார் 3000 இற்கும் மேற்ப்பட்ட 
யாத்திரிகள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.