Sunday, December 16, 2012

மட்டு தூய மரியாள் பேராலய மறைப்பாடசாலை மாணவர்களின் ஒளி விழாவும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் -2012


[வ.சுரேஸ் கண்ணா] 
மட்டக்களப்பு தூய மரியாள் பேராலய ஞாயிறு மறைப்பாடசாலை 
மறை ஆசிரியர்கள் ,மாணவர்களின் ஒளி விழாவும்  வருடாந்த
பரிசளிப்பு நிகழ்வும் 16.12.2012 ஞாயிறு மாலை 03 மணிக்கு 
மட் /சாள்ஸ் மண்டபத்தில் பங்கு தந்தை J .S .மொறாயஸ் 
அடிகளாரின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம அதிதியாக மட்டு மறைமாவட்ட ஆயர் பெருந்தகை 
பேரருட் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்களும் 
சிறப்பு விருந்தினராக மட் /கல்முனை உயர் நீதி மன்ற நீதிபதி 
கெளரவ .B .சசி மகேந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அத்துடன் பேராலய உதவி பங்கு தந்தை S .X .ரவிகாந்த் CMF ,
அருட் சகோதரிகள் ,அருட்சகோதரர் ,பெற்றோர் நலன் விரும்பிகள் 
மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 பங்கு தந்தை J .S .மொறாயஸ் அடிகள் வரவேற்ப்புரை வழங்கினார்.
மறை ஆசிரியர் ஒன்றிய தலைவர் திரு வ .சுரேஸ் கண்ணா அவர்கள் 
இவ்வாண்டுக்கான  மறைப்பாடசாலையின் ஆண்டறிக்கையினை வாசித்தார்.
அத்துடன் மறை ஆசிரியர் ஒன்றிய தலைவர் ஆயருக்கு நினைவு சின்னத்தை 
வழங்கி வைத்தார்.

மறைக்கல்வி ஆண்டை முன்னிட்டு மறைப்பாட சாலைக்கென 
மறை ஆசிரியை செல்வி T .டிலேக்ட்ரா அவர்களின் முயற்சியில் 
உருவான இணையத்தளத்தையும் (www.stmarysundayschool .com )
ஆயர் அவர்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ்விணைய தளம் ஊடாக இலங்கையின்முதல்தமிழ் 
கத்தோலிக்இணையத்தளமான தமிழ் கத்தோலிக்க 
செய்தி லங்கா இணையத்தளம் பார்வையிட 
இணைக்கப்பட்டுள்ளது.


பரீட்சை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 
பரிசில்களும் வெற்றிக்கோப்பைகளும் ,பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மறை ஆசிரியர்களுக்கான பரிசில்களை பங்கு தந்தையர்கள் வழங்கி 
வைத்தார்கள்.

பாலன் பிறப்பை மையமாகக்கொண்டசிறார்களின்  அனைத்து நிகழ்வுகளும் 
அனைவரினதும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டது.
இறுதியில் நத்தார் தாத்தா வருகைதந்து எல்லோரையும் மகிழ்வித்தார்.
























Monday, November 26, 2012

புதிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஞாபகார்த்தமாக மரதன் ஓட்ட விளையாட்டு நிகழ்வை 24.11.2012 அன்று மதிப்பிற்குரிய மட்டு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.



புதிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஞாபகார்த்தமாக 


மரதன் ஓட்ட விளையாட்டு நிகழ்வை 24.11.2012 
அன்று மதிப்பிற்குரிய மட்டு மறைமாவட்ட ஆயர் 
கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை அவர்கள் 
ஆரம்பித்து வைத்தார். 
  V.Suresh Kanna (BT/ST.MARY'S CATHEDRAL)

Saturday, November 17, 2012

புதிய மட்டு மறைமாவட்ட மேய்ப்புப் பணிச்சபையின் முதலாவது மகாநாடு -2012 .முதல் ஆயர் தலைமையில் !

புதிய மட்டு மறைமாவட்ட மேய்ப்புப் பணிச்சபையின் 
முதலாவது மகாநாடு -2012 .முதல் ஆயர் தலைமையில் !

[வ.சுரேஸ் கண்ணா ]

புதிய மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மேய்ப்புப் பணிச்சபையின் 
முதலாவது மகாநாடு -2012 ,அதன் முதல் ஆயர் பேரருட் தந்தை 
கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை   தலைமையில் 
மட்/மன்ரேசா தியான இல்லத்தில்  கார்த்திகை 16 ஆம் 17 ஆம் திகதிகளில் 
வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதிய மறை மாவட்டத்தின் கொடி ஏற்றுதல் வைபவத்தை தொடாந்து 
மறை மாவட்ட கீதம் இசைக்கப்பட்டு ,மங்கள விளக்கேற்றுதலை 
அடுத்து செப வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது!

"நம்பிக்கையை அறிந்து ,வாழ்ந்து வழங்க "(நம்பிக்கையின் ஆண்டு 
2012 /2013  )என்னும் கருப்பொருளை அடிப்படையாய்க் கொண்டு 
தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த அருட்பணியாளர் D .F .அல்போன்ஸ் 
அடிகளார் (இயக்குனர் TNBCLC) சிறப்புரை வழங்கினார்.

மறைக்கலவி  ஆண்டு- 2012 நிறைவடைந்து நம்பிக்கையின் ஆண்டு- 2013  
ஆரம்பமாவதை தொடர்ந்து வருடாந்த பொது அமர்வில் எதிர்வரும் 5  
ஆண்டுகளுக்கான மறைமாவட்ட திட்டமிடல் ,மற்றும் நிருவாக 
உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.மறைமாவட்ட இணையத்தளமும் 
ஆயர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக (http://www.battidiocese.org/)
திறந்துவைக்கப்பட்டது.

அருட்பணியாளர்கள் ,துறவறத்தோர் ,பொதுநிலையினர் என 
பலரும் இம்மகாநாட்டில் கலந்து கொண்டனர்.நிறைவில் 
 மறைமாவட்ட மேய்ப்புப் பணிச்சபையின் புதிய நிருவாக 
செயலர் செல்வி A .விமலினி அவர்களின் நன்றி உரையுடன் 
நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது.இம்மகா நாட்டினை 
பொது நிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி 
S .டக்ளஸ் ஜேம்ஸ் அடிகளார் மிகவும் சிறப்பான முறையில் 
ஒருங்கிணைத் திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  









  

Sunday, November 11, 2012

மட்/புளியந்தீவு தூய மரியாள் பேராலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரின் 13ஆவது ஆண்டு நினைவு நன்றித்திருப்பலி.



[வ.அன்டனி சுரேஸ் கண்ணா ]
மட்/புளியந்தீவு தூய மரியாள் பேராலய கத்தோலிக்க இளைஞர்
ஒன்றியத்தினரின் 13 ஆவது ஆண்டு நினைவு நன்றித்திருப்பலியும்
வருடாந்த அர்ப்பண புதுப்பித்தலையும் ஞாயிறு காலை (11 .11 .2012)
07 .30 மணி திருப்பலியில் இணைந்து சிறப்பித்தனர்.

பங்கு தந்தை J .S .மொறாயஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற 
இச்சிறப்பு திருப்பலியில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறவுகளுடன் 
பங்குமக்களும் இணைந்து ஒன்றிய வளர்ச்சிக்காக நன்றிகூறி செபித்தார்கள்.

திருப்பலி நிறைவில் 13 ஆவது ஆண்டு நினைவு கேக் வெட்டப்பட்டு 
தங்களது மகிழ்ச்சியை பங்கு மக்களுடன் ,மற்றும் பங்கு தந்தை,ஒன்றிய 
உறவுகளுடனும் பகிர்ந்துகொண்டார்கள்.

அத்துடன் இவ்வளவு காலமும் (CATHOLIC YOUTH ASSOCIATION - CYA )
என அழைக்கப்பட்டு வந்த இவ்வொன்றியம் இன்று 11 .11 .2012 முதல்
 (CATHOLIC YOUTH FEDARATION - CYF )என அழைக்கப்படும் எனவும் 
ஒன்றிய தலைவர் செல்வன் A .கிருரஜன் அவர்கள் ஒன்றிய இயக்குனரின்
உத்தியோக பூர்வ அறிவித்தலை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.